உடுமலை: மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் ஏழை எளிய நடுத்தர மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பட்ஜெட்டை
கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உடுமலை நகர குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் தண்டபாணி தலைமையேற்றார் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் ஆர் மதுசூதனன் சிறப்புரை ஆற்றினார். அப்பொழுது தற்பொழுது மத்திய அரசு நிதிநிலை அறிக்கை ஏழை எளிய மக்களை பாதிக்கும் வண்ணம் உள்ளது குறிப்பாக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளது இந்த பட்ஜெட்டால் பெரும் முதலாளிகள் மேலும் செல்வந்தர்கள் ஆவார்கள் மொத்தத்தில் ஒன்றிய அரசு தமிழகத்தை புறக்கணித்து உள்ளது என கூறலாம் என்று பேசினார் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன இறுதியாக மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம் சிறப்புரை ஆற்றிய பின் போராட்டம்
நிறைவு பெற்றது போராட்டத்தில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி