திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவிஜி மகளிர் கல்லூரியில் பாரம்பரியமான முறையில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது அப்போது தேவராட்டம் கும்மியாட்டம் சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்கள் மாணவிகள் விளையாடி அசத்தினர் இந்த நிலையில் வள்ளி கும்மி ஆட்டத்தில் கருப்புசாமி பாடல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது திடீரென இரண்டு மாணவிகளுக்கு சாமி வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் இரு மாணவிகளுக்கு விபூதி மற்றும் தீர்த்தம் வழங்கப்பட்ட பின் கலை நிகழ்ச்சியில் மீண்டும் தொடங்கியது.