உடுமலை: பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி- மகிழ்ச்சி!!

56பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை அருகே பஞ்சலிங்க அருவி நீர் பிடிப்பு பகுதிகளான குருமலை குழிப்பட்டி ஜல்லிமுத்தன் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்த காரணத்தால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கோவில் நிர்வாகம் தரப்பில் பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் இதற்கு இடையில் இன்று நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்த காரணத்தால் 10 நாட்களுக்குப்
பிறகு இன்று பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது இதனால் திருமூர்த்தி மலைக்கு வந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி