திருப்பூர் மாவட்டம் உடுமலையில் போக்குவரத்து அலுவலர் நாகராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயந்தி அடங்கிய குழுவினர் கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே, போக்குவரத்து விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.