திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆரின் 37 ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு அதிமுக ஓபிஸ் அணி (அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு) சார்பில் உடுமலை நகர செயலாளர் லயன் நடராஜன் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யு.ஜி.கே. சற்குணசாமி, மாவட்ட அமைப்பு தலைவர் வெங்கடபதி, மடத்துக்குளம் தொகுதி செயலாளர் லட்சுமண சாமி, மாவட்ட பிரதிநிதி சி.டி.சி. சௌந்தரராஜன், மாவட்ட பிரதிநிதி அமைந்துள்ள மற்றும் நிர்வாகிகள் கணேஷ் மற்றும் குணா ஆகியோர் கலந்து கொண்டனர்.