உடுமலை: ஆன்லைன் லாட்டரி விற்பனை அமோகம்; காவல்துறை அலட்சியம்

51பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட தாராபுரம் ரோடு ஐந்தாவது வார்டு தொடக்கப்பள்ளி பின்புறம் சில மாதங்களாகவே தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை தனியாக கடை அமைத்து விற்பனை நடைபெற்று வருகின்றது. 

ரூ. 20, ரூ. 25, ரூ. 30 முதல் ரூ. 1000 வரை லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. மதியம் 12 மணி மற்றும் மாலை 3 மணி அளவில் குலுக்கல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் வாங்கிச் செல்கின்றனர். 

மேலும் ஒரு சில தொழிலாளர்கள் பரிசுகள் கிடைக்காத நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதற்கிடையில் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தரப்பில் பலமுறை சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

எனவே திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடுமலை பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்று வரும் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி