திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் மற்றும் தமிழிசை சங்கம் இணைந்து அஸ்திவாரம் மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 3) தொடங்கியது. இந்த நிலையில் இன்று மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் கலந்துகொண்டு அரங்குகளை பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கம் மற்றும் உடுமலை தமிழிசை சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.