உடுமலை: தியாகி கோமதி நாயகம் 77 வது நினைவு தினம் அனுசரிப்பு

84பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் தலைமை சங்க நிர்வாகியும் சுதந்திரப் போராட்ட தியாகி கோமதி நாயகம் அவர்களின் 77 வது நினைவு தினம் இன்று தளிரோடு கார்னர் பகுதியில் உள்ள தொழிற்சங்க அலுவலகத்தில்
நடைபெற்றது அப்போது அலங்கரிக்கப்பட்டிருந்த
தியாகி கோமதிநாயகம் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் உடுமலை நகர காங்கிரஸ் தலைவர் க. ரவி, கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்கம் நாராயணசாமி, சுப்பிரமணியம், பாலகுருசாமி, கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் காளிமுத்து மற்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நல வாரியம் மாவட்ட செயலாளர் குணசேகரன் மற்றும் தியாகி குடும்பத்தார்கள் மகள் பேத்தி மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி