உடுமலை மாரியம்மன் கோவிலில் மூகூர்த்தகால் நடும் விழா

58பார்த்தது
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா நாளை (செவ்வாய் கிழமை) மாலை 4 மணிக்கு பூச்சொரிதல் மற்றும் 6 மணிக்கு நோன்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது.  
ஏப்ரல் 17ஆம் தேதி தேர்தல் திருவிழா நடைபெற உள்ளது இந்த நிலையில் திருவிழாவை ஒட்டி கோவில் வளாகத்திற்குள் பக்தர்கள் வசதிக்காக நிர்வாகத்தின் சார்பில் பந்தல் அமைக்கப்படும். இதற்கான மூகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு பரம்பரை அலங்காவலர் யு. எஸ். எஸ். ஸ்ரீதர் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓதி பாலும் மஞ்சளும் ஊற்றி மலர் தூவி கோவில் வளாகத்தில் மூகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்வின் போது கோவில் பணியாளர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி