உடுமலை: பொறியாளர் தின விழாவில் விருதுகள் வழங்கி கௌரவிப்பு!

63பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் உடுமலை மையத்தின் சார்பாக பொறியாளர் தின விழாவை முன்னிட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (செப் -30) நடைபெற்றது. அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் கையேடு பிரிவு பொறியாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் முக்கிய நிகழ்வாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் துணைப் பொறியாளர்கள் செந்தில்குமாருக்கு மனிதநேய பண்பாளர் விருதும் , இளமதிக்கு மனிதநேய வித்தகர் விருதும் மற்றும் செஞ்சூரி கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் பொறியாளர் சுந்தரத்திற்கு பசுமை நேய பண்பாளர் விருதும் அகில இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கத்தின் மையத்தின்
சார்பாக வழங்கி கௌரவிக்கபட்டது. மேலும் நிகழ்ச்சியில் 2025 ஆம் ஆண்டு உடுமலையில் நடைபெற உள்ள கட்டுமான கண்காட்சிக்கு அஸ்திவாரம் என பெயரிடபட்டு அதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் செப்டம்பர் மாத வரவு செலவு பார்க்க பட்டது. நிகழ்வில் அகில இந்திய கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் உடுமலை மையத்தின் தலைவர் பாலமுருகன் , செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் அருண்குமார் மற்றும் திருப்பூர் மாவட்ட சுற்றுலா துறை சங்க நிர்வாகி எஸ் எம் நாகராஜ் , சுபாஷ் ரேணுகா தேவி அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், உடுமலை பகுதி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி