திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருமலை மலைவாழ் பகுதியிலிருந்து திருமூர்த்தி மலை வரை மண்பாதை இல்லாத காரணத்தால் அவசரத் தேவைகளுக்கு மலைவாழ் மக்கள் உடுமலைக்கு வர கடும் அவதி அடைந்து வருகின்றனர் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணியை ஆபத்தான முறைகள் தொட்டில் கட்டி தூக்கி வந்த நிலையில் மண் பாதை அமைக்க வேண்டும் என மலைவாழ்மக்கள் தரப்பில் திருப்பூரில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது