திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் செல்லும் சாலையில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் டிஎன்பிசி குரூப் 2 போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கியது. தற்சமயம் 40 மாணவர்கள் பயிற்சி வகுப்பில் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர். செப்டம்பர் மாதம் இறுதியில் தேர்வு நடைபெற உள்ளதால் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து உள்ளது