உடுமலை: பள்ளியில் வன தின விழா கொண்டாட்டம்

59பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை வனச்சரகம், மானுப்பட்டி பிரிவிற்கு உட்பட்ட ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில்
வன தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது வனப்பணியாளர்களால் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதுடன் மாணவர்களுக்கு வனவிலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. விழாவில் உடுமலை வனச்சரக
அலுவலர் ஆ. மணிகண்டன், வனப்பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி