உடுமலை: உயிருக்கு பாதுகாப்பு அளிக்க கோரி விவசாயிகள் ஆஜர்!

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே ஜம்புகள் மலைத்தொடரில் விவசாயிகள் நிலத்தை வசந்தகுமார் என்பவர் போலியாக ஆவணங்கள் தயாரித்து ஏமாற்றிவிட்டார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் அதிகாரிகள் மீது பாதிக்கப்பட்ட விவசாயிகள் புகார் கொடுத்த நிலையில் நடவடிக்கை எடுக்காத நிலையிலும் , வசந்தகுமார் விவசாயிகளை தொடர்ந்து மிரட்டி வருவதை கண்டித்து முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் தமிழக காவல்துறை தலைவருக்கும் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்தனர் இந்த நிலையில் இன்று தளி காவல் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் கிடைத்த நிலையில் காவல் ஆய்வாளர் நீதிமன்ற மூலம் தான் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியும் என தெரிவித்தல் ஏமாற்றம் அடைந்தனர் எனவே மாவட்ட காவல்துறை விஷயத்தில் தலையிட்டு விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் முறைகேட்டில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி