திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் 70-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்யாமல் குளங்களுக்கு நீர்வரத்து இல்லை. வடகிழக்கு பருவமழை துவங்கியதும் பிஏபி இரண்டாம் ஆண்டு பாசன நீரை வீணாக்காமல் குளங்களில் நிரப்பினர். இதனால் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பிய நிலையில் 15-க்கும் மேற்பட்ட குளங்கள் தற்போழுது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. எனவே குளங்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டுமென பகுதி விவசாயிகள் பொதுப்பணித்துறைக்கு மனு அளித்துள்ளனர்.