திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு கடந்த 7-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை 20 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை விடுத்தது இதற்கிடையில் திருமூர்த்தி அணை பாசன திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பூசாரி நாயக்கன் குளத்திற்கு தண்ணீர் திறக்க கூடாது என சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் பூசாரி நாயக்கன் குளத்தை பயன்படுத்தும் விவசாயிகளும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அரசாணை படி தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகளிடம் மாவட்ட ஆட்சியர் உத்தரவாதம் அளித்த நிலையில் தண்ணீர் திறக்கப்படவில்லை இந்த நிலையில் தமிழக அரசு அரசாணை விடுத்தும் தண்ணீர் திறக்காத அரசு நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து இன்று 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உடுமலையில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது தமிழக அரசு அரசாணைப்படி தண்ணீர் திறக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தண்ணீர் திறப்பை தடுக்கும் திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோசங்கள் எழுப்பப்பட்டது