உடுமலை: புதர்மண்டி காணப்படும் எத்தலப்பர் மணி மண்டபம்

82பார்த்தது
உடுமலை: புதர்மண்டி காணப்படும் எத்தலப்பர் மணி மண்டபம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த தளிபேரூராட்சிக்கு உட்பட்ட காண்டூர் கால்வாய் அருகே அரங்கமும், உடுமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் எத்தலப்ப நாயக்கர் முழுஉருவச் சிலையும் அமைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி எத்தலப்ப நாயக்கர் சிலை மற்றும் நினைவு அரங்கம் திறந்து வைக்கப்பட்டது. 

ஆனால் நினைவு அரங்கம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் மூடி வைக்கப்பட்டு காட்சிப் பொருளாக மாறி உள்ளது. அத்துடன் போதிய பராமரிப்பு இல்லாததால் வளாகம் முழுவதும் புதர் மண்டி வருகிறது. அரசு அனைவரது உணர்வுகளுக்கும் மதிப்பு அளித்து தனது கடமையை செவ்வனே செய்து முடித்து விட்டது. 

ஆனால் அது எந்த நோக்கத்திற்காக அமைக்கப்பட்டதோ அதை நிறைவேற்றுவது அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும். நினைவு அரங்கம் பயன்பாட்டில் இல்லையென்றால் அது நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாமல் பழுதடையும் வாய்ப்புகள் உள்ளது. எனவே திருமூர்த்தி மலை காண்டூர் கால்வாய் அருகே கட்டப்பட்டுள்ள எத்தலப்ப நாயக்கர் நினைவு அரங்கத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி