உடுமலை: விபத்தில் துண்டான கை இணைப்பு- மருத்துவர்கள் சாதனை

58பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே ஒரு கிராமத்தில் சில தினங்களுக்கு முன் விபத்து ஒன்றில் 19 வயது வாலிபர் இடது கை உண்டானது இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் துண்டான கையுடன் உடுமலையில் உள்ள மோகன் ஆர்த்தோ மருத்துவமனைக்கு அவசர ஊர்தியில் வந்த நிலையில் அவரை பரிசோதனை செய்த தலைமை மருத்துவர் மோகன்ராஜ் உடனடியாக அவசர பிரிவில் அனுமதித்தார் பின்னர் தலைமை மருத்துவர் மோகன்ராஜ் தலைமையிலான பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் கௌஷிக் குமார் மற்றும் மயக்கவியல் நிபுணர்கள் நர்மதா , சுரேஷ் ஆகிய குழுவினர் விபத்தில் கையை இழந்த வாலிபருக்கு திவிர சிகிச்சை மேற் கொண்டனர் அறுவை சிகிச்சை அரங்கமும் தயார் நிலையில் இருந்த நிலையில் மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சையை துவங்கினர். துண்டான கையை மணிக்கட்டு பகுதியில் சரி செய்தல் முழங்கைக்கு மேல் பகுதி எலும்பினை சீரமைத்தல் போன்ற பணியை தனித்தனியே மேற்கொண்டனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை குழு கையினை திரும்ப பொருத்தும் ரீபிளான்டேசன் பணிக்காக தயார் செய்த பின் எலும்பு இணைப்பிற்கு ரத்த நாளங்கள் சரி செய்யும் பணி நடைபெற்றது பின்னர் ஆறு மணி நேரம் நடைபெற்ற சவாலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடித்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் வாலிபர் தற்பொழுது நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி