திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலயேர்களுக்கு சிப்ப சொப்பனமாக விளங்கிய எத்தலப்ப நாயக்கரின் அவரது பங்களிப்பை போற்றும் வகையிலும்
இந்த சுற்று கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமையில் எத்தலப்ப நாயக்கர் வம்சாவழியினர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து வழிபாடு நடத்துகின்றனர். அந்த வகையில் இன்று சிறப்பு பூஜையுடன் வழிபாடு நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக எத்தலப்ப நாயக்கரின் குலதெய்வமான ஜக்கம்மாளுக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து எத்தலப்ப நாய்க்கர், அவரது துணைவியார் உள்ளிட்ட படை தளபதிகள், போர் வீரர்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜக்கம்மாள், எத்தலப்ப நாயக்கர், அவரது துணைவியார் உள்ளிட்டோரை சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக பாரம்பரியமான இசை கருவி உருமி சத்தத்துடன் கூடிய தேவராட்டமும் கலைஞர்களால் அரங்கேற்றப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை எத்தலப்ப நாயக்கர் வம்சாவழியினர் செய்து இருந்தனர்.