உடுமலை: தரமற்ற பாலத்தால் வெள்ளப்பெருக்கு -வாகன ஓட்டிகள் அவதி

62பார்த்தது
திருப்பூர் உடுமலை அருகே குடிமங்கலம் ஆமந்த கடவு அருகே உப்பாறு ஓடையின் குறுக்கே தரைமட்ட பாடம் கட்டப்பட்டுள்ளது இந்த பாலத்தின் வழியாக ஆமந்தக்கடவு ஆ. அம்மாபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் அரசு பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு தினமும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அரசர் ஷட்டர் மூலம் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் திறக்கப்பட்ட தண்ணீர் காரணமாகவும் இப்பகுதியில் பெய்து மழையின் காரணமாகவும் தரை மட்ட பாலத்தை தாண்டி தற்போது தண்ணீர் வருகின்றது. இதனால் இந்த வழியாக செல்லும் கிராம பகுதிகளை சேர்ந்த வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது
இந்த பாலம் சில ஆண்டுகளுக்கு முன் தமிழக முதல்வரின் மேம்பாட்டு திட்டத்திற்கு கீழ் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது ஏற்கனவே இருந்த தரைமட்டம் பாலத்தை விட
முறைகேடாக குறைவாக கட்டப்பட்டுள்ளதால் தற்பொழுது அதிகளவு தண்ணீர் சென்று வருகின்றது மேலும் பாலத்தின் தடுப்புச் சுவர் தற்பொழுது வெள்ளப்பெருக்கால்
இடிந்து சேதம் அடைந்துள்ளது. பொதுமக்கள் உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் விடுத்த நிலையில் உயர் மட்ட பாலம் கட்டாமல் இருந்த காரணத்தால் தற்பொழுது பாலத்தில் அதிகளவு தண்ணீர் செல்கின்றது எனவே உயர் மட்ட பாலம் அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி