உடுமலை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி குறித்த அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
உடுமலை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் ஆர்.டி.ஓ ந. குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது வாக்காளர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் புதிய வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிகழ்வில் நேர்முக உதவியாளர் அருணா, தாசில்தார்கள் கவுரிசங்கர், குணசேகரன், தேர்தல் துணை தாசில்தார்கள் சையது ராபியம்மாள், வளர்மதி உள்ளிட்ட அதிகாரிகள், உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.