உடுமலை: தங்கம் , வெள்ளி வென்ற வீரருக்கு நேரில் பாராட்டு!

81பார்த்தது
உடுமலை: தங்கம் , வெள்ளி வென்ற வீரருக்கு நேரில் பாராட்டு!
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த மனோகரன் என்பவர் கடந்த நாட்களுக்கு முன் இலங்கையில் நடைபெற்ற மூத்தோர் தடகளப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று உடுமலைக்கு பெருமை சேர்த்தார் இந்த நிலையில் ரேணுகாதேவி நற்பணி மன்றத்தின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் தலைவர் பெருமாள்சாமி , கௌரவ தலைவர் ரங்க இராமானுஜம், ஆடிட்டர் ராஜராம், பால்ராஜன், சுப்புராஜ், ஆசிரியர்கள் சீனிவாசராக ராகவன், ஆழ்வார் சாமி , அப்புராஜ், சீனிவாசன், முனியசாமி, கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி