திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் மூங்கில்தொழவு ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் தொழவு சிக்கனூத்து மன்னாம் பாளையம் பகுதிகளில் தரை தள நீர் தேக்க தொட்டி கழிவு நீர் கால்வாய் அமைத்தல் கான்கிரீட் தளம் சிறு கல்வெட்டு பாலம் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 55 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கிய நிலையில் இன்று பணிகள் பூமி பூஜையுடன் துவங்கியது. நிகழ்வில் முன்னாள் அமைச்சர் உடுமலை சட்டமன்ற உறுப்பினரான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிரனேஷ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்