திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது உடுமலை மடத்துக்குளம் வட்டார பிரம்ம குமாரிகள் பொறுப்பு சகோதரி மீனா அனைவரையும் வரவேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் மேலும் போதை பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தார். உடுமலை தீயணைப்பு நிலையம் மற்றும் போக்குவரத்துக் காவல் நிலையம் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதை பொருட்கள் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது விழிப்புணர்வு பேரணியில் புகையிலை ஏற்படும் பாதிப்புகள் குறித்து தத்துருவமாக , மதுபானம்
சிகரெட் படங்களுடன் பொது மக்களுக்கு எளிதாக புரியும் வண்ணம பதாகைளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது