திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்திமலை அமிழ்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (ஜனவரி 1) ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர். அப்போது அமிழ்தலிங்கேஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், இளநீர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.