உடுமலை: கூடுதல் கட்டிடம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாதிரி கிளை நூலகத்தில்
22 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய இணைப்பு கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றப்பட்டு படிப்பக கூடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிகழ்வில் உடுமலை நகரச் செயலாளர் சி. வேலுச்சாமி, நகர மன்ற உறுப்பினர்கள், நூலகர் பீர்பாஷா வாசகர் வட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி