திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டியில் பொள்ளாச்சி பாஜக வேட்பாளர் வசந்த ராஜனை ஆதித்து திரைப்பட நடிகர் விக்னேஷ் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. திராவிட கட்சிகளுக்கு தொடர்ந்து ஓட்டுகள் அளித்து
ஏமாந்த மக்கள் தற்பொழுது மாற்றத்திற்கு தயாராகி பாஜகவை ஆதரிக்க துவங்கியுள்ளனர் என்று பேசினார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.