உடுமலை: பாம்பு கடித்து மலைவாழ் மக்கள் ஓருவர் படுகாயம்!

55பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரக பகுதியில் உள்ள குருமலை மலைவாழ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் திருமூர்த்தி மலைக்கு மளிகை சாமான்கள் வாங்க வந்த நடந்து வந்த பொழுது கருஞ்சோலை எந்த இடத்தில் பாம்பு ஒன்று கடித்தது இந்த நிலையில் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்ல சாலை வசதி இல்லாத காரணத்தால் மலைவாழ் மக்கள் ஒன்றிணைந்து தொட்டில் கட்டி தற்பொழுது கரடு முரடான பாதையில் வந்து கொண்டுள்ளனர் இதற்கிடையில் குரு மலையில் இருந்து அடிவாரம் பகுதிகளில் உள்ள திருமூர்த்தி மலைக்கு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் சாலை அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் சாலை வசதி இல்லாத காரணத்தால் குரு மலையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் பயணம் செய்து அரசு மருத்துவமனை அடையும் நிலை உள்ள நிலையில் தற்பொழுது கரடு முரடான பாதையில் திருமூர்த்தி மலை நோக்கி தொட்டில் கட்டி கொண்டு செல்கின்றோம் பல ஆண்டுகளாக எங்களது கோரிக்கை நிறைவேறமால் உள்ளது இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன் கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் கூட நிகழ்ந்துள்ளது எனவே தமிழக அரசு உடனடியாக குறுமலையிலிருந்து திருமூர்த்தி மலை வரை நான்கு கிலோ மீட்டருக்கு சாலை அமைத்து தர வேண்டும் என மழைவாழ் மக்கள்தெரிவித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி