திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் 10 மணி முதல் 1 மணி வரை என அறிவிக்கப்பட்டிருந்தது இந்த நிலையில் முகாமில் நரம்பு , காது மருத்துவர் வரவில்லை மேலும் மாற்றுத்திறனாளிகள் அட்டைகளில் கையெழுத்து போடும் அதிகாரி மாவட்ட அலுவலர் வசந்த் குமார் 12: 30 மணி அளவில் வந்ததால் மாற்று திறனாளிகள் கடும் அவதி அடைந்தனர்.