திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உடுமலை ஒன்றிய கமிட்டி சார்பில் 22 ஆம் மாநாடு ஒன்றிய தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கமிட்டி உறுப்பினர் மாசாணி வரவேற்புரை ஆற்றினார் மாநாட்டை மாவட்ட
துணை செயலாளர் பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்து உரையாற்றினார். உடுமலை ஒன்றிய செயலாளர் வேலை அறிக்கை முன்வைத்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி முன்னாள் தாலுகா செயலாளர் கனகராஜ் பேசினர். பின்னர் புதிய நிர்வாகிகளாக ராமசாமி மாசாணி கருப்புசாமி ஹரி பிரேம் சபரிநாதன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.