உடுமலை மலை கிராமத்தில் தொடரும் சோகம்

71பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருமலை மலைவாழ் குடியிருப்பு சேர்ந்த சுமதி என்பவர் தற்போது 2 மாத கர்ப்பமாக உள்ளார். இந்த நிலையில் சுமதிக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் மயக்கம் அடைந்த நிலையில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு செல்ல வனப்பகுதியில் பாதை இல்லாத காரணத்தால் தொட்டில் கட்டி கருஞ்சோலை வழியாக வருகை தந்தனர். எனவே குருமலை பகுதியில் இருந்து திருமூர்த்தி மலை வரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள மண் சாலை அமைக்க வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி