திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலையில் உள்ளது பஞ்சலிங்க அருவி. கடந்த சில தினங்களாக நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மழைப் பொழிவு குறைந்த காரணத்தால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இதனிடையே இன்று சுற்றுலா பயணிகளுக்கு அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்தனர்.