உடுமலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்!

76பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே திருமூர்த்தி
மலையில் புகழ் பெற்ற அமணலிங்கேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இதற்கிடையில் கோவிலில் இருந்து சுமார் ஒரு
கிலோ மீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ள காரணத்தால் சென்னை மதுரை கோவை திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் அதிகளவு வருகை புரிந்து வந்தனர். இந்த நிலையில் இன்று விடுமுறை மற்றும் கடும் வெப்பம்
நிலவி வந்த நிலையில் பஞ்சலிங்க அருவியில் இன்று அதிக அளவு குவிந்தனர். தமிழக முழுவதும் இன்று கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில் பஞ்சலிங்க அருவியில் குளிர்ந்த நீருடன் அருவியகல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் தற்போது ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தோம் என சுற்றுலா பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதற்கிடையில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் பஞ்சலிங்க அருவி பகுதியில் கோவில் ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி