திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், உட்பட இளநிலையில் மட்டுமே, 22 பாடப்பிரிவுகளுக்கு, 864 இடங்கள் உள்ளன. முதல் ஷிப்ட்டில், 19 பிரிவுகள், இரண்டாம் ஷிப்ட்டில் மூன்று பாடப் பாடப் பிரிவுகளும் உள்ளன. சேர்க்கைக்கான பதிவு களை www. tngasa. in என்ற இணையதளத்தில் பதிவுசெய்ய வேண்டும். சேர்க்கைக்கான பதிவுக்கு இன்று
(மே 19) இறுதி நாளாக உள்ளது.
இன்று மாலை, 5: 00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது.
மாணவர்களின் தரவரிசைப்பட்டியல், கல் னலுாரி இணையதள முகவரியில் மே 26ம்தேதி வெளியிடப்படுகிறது. தொடர்ந்து 29ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், 30ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை பிற மாண வர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது