திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் குமரலிங்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் விக்டஸ் குழுமம் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை இணைந்து சுற்றுச்சூழல் தினத்திற்காக சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் திரு. M. மாரியப்பன் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை நிறுவனர் எஸ். ஏ. ஐ நெல்சன் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது
இப்பேரணியானது பள்ளியில் இருந்து துவங்கி குமரலிங்கம் பேருந்து நிறுத்தம் வரை சென்று மீண்டும் பள்ளியில் முடிவுற்றது. பின் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் வழங்கி பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உடன் பள்ளியின் பசுமை படை ஆசிரியர் மதன் அவர்களும் விக்டஸ் குழும நிர்வாகிகளும் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 80க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.