திருப்பூர்: பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு

56பார்த்தது
திருப்பூர்: பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு
அரசு மேல் நிலைப்பள்ளி குமரலிங்கத்தில் 750 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளி 97 சதவீத தேர்ச்சி விழுக்காட்டை பெற்றிருந்தது. 

முதல் மதிப்பெண் 468 கிஷோர் என்ற மாணவனும் 467 மதிப்பெண்கள் பெற்ற சமீரா இரண்டாம் இடத்திலும் 464 மதிப்பெண்களைப் பெற்ற இர்பானா பாத்திமா மூன்றாம் இடத்திலும் வெற்றிவாகை சூடி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். 400 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவ மாணவியர்கள் பெற்று பெருமை சேர்த்தனர். சமூக அறிவியல் பாடத்தில் உச்ச மதிப்பெண் 100 பெற்று பள்ளியில் வரலாற்று சாதனை படைத்தனர். இதனை கொண்டாடும் நோக்கில் மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு இப்பள்ளியின் ஓவிய ஆசிரியர் திரு. மதன்குமார் அவர்கள் தனது ஒரு மாத சம்பளத்தை தலா ௹ 15000 வீதம் மூவருக்கும் மொத்தம் 45000 (நாற்பத்து ஐந்தாயிரம்) பொற்கிழி வழங்குதல் என்று பரிசுத்தொகை வழங்கினார். 

பாடங்களில் உச்ச மதிப்பெண் பெற்றவர்களுக்கும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. தனது சம்பளத்தில் பெரும்பகுதியை மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் படிப்பிற்கும் வழங்கிய ஓவிய ஆசிரியரை தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியை தமிழ் செல்வி உட்பட அனைவரும் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி