திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பகுதியில் மூணாறு சாலை வழியாக தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இன்று சின்னாறு சோதனைச் சுரங்கப்பாதை அருகில் கொம்பன் என்ற காட்டு யானை மூணாறு சாலைக்குத் திடீரென வந்ததால் சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர். இந்நிலையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் யானைகளுக்குத் தொந்தரவு செய்யக்கூடாது, அதிக ஒலி எழுப்பக்கூடாது என உடுமலை வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.