திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து உடுமலை நகராட்சிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பெரியகுளம் பகுதியில் பராமரிப்பு பணிகளின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது எனவே குடிநீர் குழாய் உடைப்பை உடனே சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.