உடுமலையில் தமிழக ஆசிரியர் கூட்டணி முதல்வருக்கு எச்சரிக்கை

80பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். வட்டார செயலாளர் கோகுலன் வரவேற்புரை ஆற்றினார். ஆசிரியர் மேபல் ராணி உறுதிமொழி வாசித்தார். துணை செயலாளர் ராஜசேகர் ஆண்டறிக்கை வாசித்தார். வட்டாரப் பொருளாளர் காந்திமதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள், 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், பல்வேறு விருது பெற்றவர்கள் பாராட்டு விழா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் தமிழ்வண்ணன் உள்ளிட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசும் பொழுது
தமிழக முதல்வர் பழைய ஓய்வது திட்டத்தை நிறைவேற்றாமல் காலதானம் செய்து கொண்டுள்ளார் எனவே வரும் 2026 ஆம் தேர்தலில் அரசு இந்த ஊழியர்களால் 50 தொகுதிகளை திமுக இலக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார் மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி