உடுமலை ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அவசியம்

54பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை ரயில் நிலையம் வழியாக தினமும் சென்னை, மதுரை, பாலக்காடு, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் 100க்கணக்கான பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு தருவதற்காகவும், சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையிலும் உடுமலை ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தொடர்புடைய செய்தி