திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் அமைந்துள்ள சித்தி புத்தி விநாயகர் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் வேள்வி நடத்தப்பட்டது. முன்னதாக சித்தி புத்தி விநாயகர், முருகன்,
சனீஸ்வரர், சொர்ணாகர்சணபைரவர், துர்க்கைஅம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 16 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சித்தி புத்தி விநாயகர் உள்ளிட்ட கடவுள்கள் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.