திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள சீனிவாசாஞ்சநேயர் பெருமாள் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இன்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு சீனிவாசாஞ்சநேயர் பெருமாளுக்கு பால், தயிர், பன்னீர் உட்பட 16 அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.