திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் மழை மீது உள்ள அழகு திருமலை ராஜ பெருமாள் கோவிலில் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அப்போது மழை வேண்டி சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனம் அலங்கார பூஜைகள் நடைபெற்றது பக்தர்கள் பொங்கல் வைத்து வருண பகவானை வேண்டி வருண ஜெபம் செய்து மனமுருகி பிரார்த்தனை நடைபெற்றது. வளர்ச்சி வாரியம் மேலாளர் ரகோத்தமன் அலுவலர்கள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.