உடுமலையில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை

60பார்த்தது
திருப்பூர் மாவட்டம்
உடுமலையில் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந்தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை
சிறப்பாக. கொண்டாடப்பட்டது. தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாக உடுமலையில் உள்ள அற்புத அன்னை ஆலயம் இம்மானுவேல் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு
ஆலயத்தில்
கிறிஸ்தவ பெருமக்கள் சிறப்பு பிரார்த்தனை மற்றும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஒரு சிறந்த வருடமாக அமைய சிறப்பு பிரார்த்தனையும், செல்வம் செழித்து இன்புற்று, வருகின்ற வருடத்தில் சீற்றங்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாத அளவிற்கு, வருகிற வருடம் அனைவருக்கும் சந்தோசமாக அமைய சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. மேலும் தேவாலயங்களில் இயேசு பிறப்பு குறித்து விளக்கம் சிறப்பு குடில்களை அனைவரும் கண்டுகளித்தனர்

அதிகளவில் மக்கள் தேவாலயங்களில் கூடுவதால், எந்த வித அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க உடுமலை முழுவதும் சுமார்150-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேவாலயங்கள் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி