திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் உள்ள ஆசாத் வீதியில் ஏராளுமான குடியிருப்புகள் , வணிக நிறுவனங்கள் அதிக அளவு உள்ளது. இந்த நிலையில் இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே பாதாள சாக்கடையின் மூடிகள் சிதலமடைந்து இருப்பதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. உடனே பாதாளசாக்கடை மூடிகளை நகராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கபட்டு உள்ளது.