திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொருட்டு நிவாரணப் பொருட்கள் அனுப்பும் பணி உடுமலை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக 5.25 டன் (5,250 கிலோகிராம்) புழுங்கல் அரிசி உடுமலை வட்ட கிராம உதவியாளர்கள் மூலம் அனுப்பப்பட்டது.