திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் ரம்ஜான் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரியின் செயலர் சுமதி கிருஷ்ண பிரசாத் தலைமை வகித்தார். இயக்குனர் மற்றும் ஆலோசகர் முனைவர் ஜே. மஞ்சுளா மற்றும் முதல்வர் பி. கற்பகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடுமலை நகரமன்ற தலைவர் மு. மத்தீன், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்துல் காதர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
3-ம் ஆண்டு வணிகவியல் மாணவி ஜெஸினா வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் நோன்பின் மாண்பு குறித்தும், பெண் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளிடையே உரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறையின் இணைப்பேராசிரியருமான முனைவர் எம். கலாவதி, பொருளாதாரத்துறையின் உதவி பேராசிரியர் முனைவர் எம். மெஹர் பானு மற்றும் கணிதத் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் ஏ. பர்வீன் பானு ஆகியோர் செய்திருந்தனர்.