திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இங்கு பிற்படுத்தப்பட்ட மாணவர் சங்கம் விடுதி உள்ளது. விடுதி வளாகத்தில் முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தால் மழைநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கியுள்ளது. இதன் காரணமாக விஷச் சந்துக்கள் விடுதிகளை படையெடுத்துள்ளன. மேலும் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீரை அகற்ற வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.