உடுமலை பேருந்து நிலையத்தில் தள்ளூ வண்டிகள் ஆக்கிரமிப்பு

75பார்த்தது
உடுமலை பேருந்து நிலையத்தில் தள்ளூ வண்டிகள் ஆக்கிரமிப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மத்திய பேருந்து நிலையத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொழுமம் குமரலிங்கம் பேருந்துகள் நிற்கும் இடத்தில் தற்பொழுது தள்ளுவண்டிக் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் ஒதுங்கி நிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்த தள்ளுவண்டி கடைகளை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி