திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் நேற்று (பிப்.3) தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. நிகழ்வுக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவி தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு கோவில் மண்டபத்தில் பொது விருந்து வழங்கப்பட்டது. நிகழ்வில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.